நட்சத்திரங்கள் பலர் வெளியிட்ட ’ஆதாரம்’ பட டீசர்

மேட்னி ஃபோக்ஸ் நிறுவனம் சார்பில்  G.பிரதீப்குமார், ஆப்ஷா  மைதீன் தயாரிப்பில், இயக்குநர் கவிதா இயக்கத்தில், புதுமுகங்கள் நடித்திருக்கும் அதிரடி ஹெய்ஸ்ட் திரில்லர் திரைப்படம் “ஆதாரம்”. இப்படத்தின் டீசரை திரை பிரபலங்கள் நடிகர் விஜய் சேதுபதி, இயக்குநர் PS மித்ரன், ஒளிப்பதிவாளர் PG முத்தையா மற்றும் இயக்குநர் S R பிரபாகரன் ஆகியோர் வெளியிட்டனர். 

நம் கண் பார்க்கும் விசயங்களில் விவரங்கள் குவிந்திருக்காது. அது எளிதில் மறந்து போகும் ஆனால் சிசிடிவியின் கண்கள், பாரத்த அனைத்தையும் சேமித்து வைக்கும் அது அழிந்து போகாது. இந்த கருவை மையமாக கொண்டு நகைக்கடை கொள்ளையின் பின்னணியில் உருவாகியுள்ள திரைப்படம் தான்  “ஆதாரம்”.

திரை பிரபலங்கள் வெளியிட்ட இப்படத்தின் டீசர், சமூக வலைதளங்களில் ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இயக்குநர் சீனு ராமசாமி அவர்கள் இந்த டீசரை பகிர்ந்து கவனம் ஈர்க்கும் டீசர் வாழ்த்துக்கள் என பாராட்டியுள்ளார். 

Read Previous

படத்தின் வெற்றி தோல்விக்கு இயக்குநர் தான் காரணம் – தயாரிப்பாளர் கே ராஜன்

Read Next

‘யசோதா’ படம் பற்றி சமந்தா பேட்டி – வீடியோ