லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், கமல்ஹாசன், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், காஜல் அகர்வால் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘இந்தியன் 2’.
இப்படம் அடுத்த வாரம் ஜுலை 12ம் தேதி பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது. இப்படத்திற்கான விளம்பர வேலைகளை மிகப் பிரம்மாண்டமாக செய்து வருகிறது தயாரிப்பு நிறுவனம்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் இப்படம் பெரும் வசூலைக் குவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பல கோடி செலவு செய்து விளம்பரப்படுத்தி வருகிறார்கள்.
அது மட்டுமல்ல வெளிநாடுகளிலும் இப்படம் நல்ல வசூலைப் பெற வித்தியாசமான முறையில் விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது.
துபாயில் மிகப் பிரபலமான ‘துபாய் ஸ்கைஸ்’ என்ற வானில் பாராசூட்டில் பறக்கும் வீரர்கள் ‘இந்தியன் 2’ பேனரை வானில் பறக்க விட்டு சாகசம் செய்துள்ளனர்.
இந்த வீடியோ சினிமா ரசிகர்களின் கவனத்தை பெரிதாக ஈர்த்துள்ளது.