‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’வில் புதிதாக ப்ரியா ஆனந்த்…

‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ என பெயர் வைத்தாலும் வைத்தார்கள், படத்தில் அவர்களைத் தவிர மற்ற நாயகிகளை நடிக்க வைத்து விடுவார்கள் போலிருக்கிறது.

இந்தப் படத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் ஜோடியாக ‘கயல்’ ஆனந்தி நடிக்கிறார். அதன் பின் படத்தில் மனிஷா யாதவ்வை மற்றுமொரு நாயகியாகச் சேர்த்தார்கள். அடுத்து 90களின் கனவுக்கன்னி சிம்ரனை சேர்த்தார்கள்.

இப்போது புதிதாக ப்ரியா ஆனந்தையும் ஒரு சிறப்புத் தோற்றத்தில் சேர்த்திருக்கிறார்களாம்.

“ஒரு கௌரவத் தோற்றக் கதாபாத்திரத்தில் அழகான நடிகை ஒருவரை நடிக்க வைக்க வேண்டும் என்று எண்ணினோம். அதன் பின் பிரியா ஆனந்தைத் தேர்வு செய்தோம். அந்தக் கதாபாத்திரத்தில் உற்சாகமாகவும், குதூகலமாகவும் நடித்துக் கொடுத்து படக்குழுவினரை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தினார் ப்ரியா,” என பாராட்டித் தள்ளுகிறார் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன்

இப்படத்தின் இசை வெளியீட்டை ஜுன் 4ம் தேதி நடத்த உள்ளார்களாம்.

Read Previous

இயக்குனர்கள் சங்கம் – கே.பாலசந்தர் அரங்கம் திறப்பு

Read Next

இருவர் ஒன்றானால் – விமர்சனம்