‘பேய்கள் ஜாக்கிரதை’ – நகைச்சுவையான ஒரு பேய்ப் படம் ரெடி ?

ஸ்ரீ சாய் சர்வேஷ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பாக ஜி.ராகவன் தயாரிக்க கண்மணி இயக்கியுள்ள படம் ‘பேய்கள் ஜாக்கிரதை’.

புதுமுகம் ஜீவரத்னம், ஈஷான்யா, தம்பி ராமையா, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், மனோபாலா, ஜான் விஜய், ஆடுகளம் ஜெயபாலன் மற்றும் பலர் நடித்துள்ள இந்தப் படத்தின் மூலம் மரிய ஜெரால்டு இசையைமப்பாளராக அறிமுகமாகிறார்.

தொடர்ந்து பேய்ப் படங்களாக வந்து கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில் இந்தப் பேய்ப் படத்தை ஒரு நகைச்சுவைப் படமாகவும் உருவாக்கியிருக்கிறாராம் இயக்குனர்.

படம் பற்றி அவர் கூறியதாவது,

“பேய்கள் இருக்கிறது என்று சொல்லிக் கொண்டிருப்பவர்  தம்பி ராமையா, பேயா அதெல்லாம் ஒன்றுமில்லை என்று சொல்லும் நாயகன் ஜீவரத்னம் இருவரும் ஒரு சந்தர்ப்பத்தில் சந்திக்கிறார்கள். பேய் இருப்பதாக நம்பிக் கொண்டிருக்கும் தம்பி ராமையாவை பேய் இல்லை என்று சொல்ல வைக்கும் அளவிற்கு மாற்றி விடுகிறார் ஜீவரத்னம்.

ஆனால், ஒரு சந்தர்ப்பத்தில் ஜீவரத்தினத்தினமே பேய் இருக்கிறது என்று நம்ப ஆரம்பிக்கிறார். அவர் அப்படி மாறக் காரணம் என்ன ? தம்பி ராமையா பேய் இருப்பதாகச் சொல்வதன் பின்னணி என்ன ? என்பதைத்தான் இந்தப் படத்தில் நகைச்சுவையாகச் சொல்லியிருக்கிறோம்.

இந்தப் படத்தில் தம்பி ராமையாவும், நான் கடவுள் ராஜேந்திரனும் பாடி நடித்துள்ள ‘ஒபாமாவை ஒதுங்கச்  சொல்லு….’ என்ற நகைச்சுவையான பாடல் ஒன்று இடம் பெற்றுள்ளது. யு டியூபில் அந்தப் பாடலைப் பார்த்த பலரும் அதைப் பற்றிப் பாராட்டி வருகிறார்கள்.

ஒரு சுவாரசியமான, பரபரப்பான, த்ரில்லர் படமாகவும் இந்தப் படம் இருக்கும்,” என்கிறார் இயக்குனர் கண்மணி.

https://youtu.be/6k_WfUxD1d8

Read Previous

ஜெயா டிவி – ஜுலை 20 முதல் 26 – திரைப்படங்கள் விவரம்

Read Next

Maiem – Official Teaser