பேரண்ட்ஸ் பிக்சர்ஸ் சார்பில் s.சண்முகம் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அஞ்சுக்கு ஒண்ணு’.
ஆர்வியார் இயக்கத்தில் சாகித்யா இசையமைப்பில் ஜெரால்டு, ராஜசேகர், அமர், நசீர், சித்தார்த், உமாஸ்ரீ ,மேக்னா ஆகியோருடன் சிங்கம் புலி, முத்துக்காளை, உமா, கசாலி, ஷர்மிளா, காளையப்பன், சிவநாரயனமூர்த்தி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இப்படம் பற்றி தயாரிப்பாளர் கூறுகையில்,
“இயக்குநர் சொன்ன பட்ஜெட்டில் சொன்னபடியே படத்தை முடித்துக் கொடுத்துள்ளார். பாடல்கள் அனைத்தும் சிறப்பாகவுள்ளது. அதேபோல் படமும் சிறப்பாக வந்துள்ளது,” என்றார்.
படத்தின் இயக்குனர் ஆர்வியார் பேசுகையில்,
“நான் தயாரிப்பளருக்கு சொன்ன பட்ஜெட்டில் சொன்னபடி படத்தை முடித்துக் கொடுத்துள்ளேன். அதனால் தான் அவர் எனக்கு அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பு அளித்துள்ளார். அந்த படத்திற்கு ‘அழுக்கு’ என்று பெயர் வைத்துள்ளேன்,” என ‘அஞ்சுக்கு ஒண்ணு’ படத்தை சரியாக முடித்துக் கொடுத்து ‘அழுக்கு’ படத்தை இயக்கும் வாய்ப்பைப் பற்றியும் கூறினார்.
“கட்டிட வேலை செய்யும் கூலி தொழிலாளர்களின் வாழ்கையை மிக யதார்த்தமாக கூறியுள்ள படம் இது. கட்டிட வேலை செய்யும் ஐந்து இளைஞர்களின் வாழ்கையில் ஒரு பெண் வருகிறாள். அதன் பின் அவர்கள் வாழ்வில் என்ன நடக்கிறது என்பதுதான் கதை,” என்கிறார் இயக்குனர்.
“45 நாள் குளிக்க விடாமலும்,முக அலங்காரம் செய்ய விடாமலும் செய்து எங்களை கட்டிட தொழிலாளர்களாகவே மாற்றி விட்டார் இயக்குனர். இராணுவத்தில் பணியாற்றியதைப் போல் பணிபுரிந்ததாகவும் இந்த படத்தின் அனுபவம் எப்போதும் எங்களால் மறக்க முடியாது,” என்று படத்தின் ஐந்து கதாநாயகர்களும் கோரஸாகச் சொல்கின்றனர்.
விரைவில் படம் திரைக்கு வருகிறது.