சசிகுமார் நடிக்கும் ‘வெற்றி வேல்’

பாலா இயக்கத்தில் உருவாகி வரும் ‘தாரை தப்பட்டை’ படத்திற்குப் பிறகு சசிகுமார் அடுத்து நடிக்கும் புதிய படத்திற்கு ‘வெற்றி வேல்’ எனப் பெயரிட்டிருக்கிறார்கள்.

ட்ரைடன் ஆர்ட்ஸ் சார்பாக ரவீந்திரன் தயாரிக்கும் இந்தப் படத்தை வசந்தமணி இயக்குகிறார். டி. இமான் இசையமைக்க எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்கிறார். சசிகுமாரின் ஜோடியாக புதுமுகம் ஒருவர் அறிமுகமாகிறார். தம்பி ராமையா, ரேணுகா, விஜ மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தஞ்சாவூரில் ஆரம்பமானது.

Read Previous

10 Endrathukulla – Vroom Vroom – Song Lyric

Read Next

Mahesh Babu’s Brahmotsavam started…