மீண்டும் புதுமுகத்துடன் மிஷ்கின்

‘பிசாசு’ படத்திற்குப் பிறகு மீண்டும் புதுமுகம் நாயகனாக நடிக்க உள்ள புதிய படத்தை இயக்க உள்ளாராம் மிஷ்கின்.

இந்தப் படத்தில் ஷியாம் என்ற புதுமுகம் நாயகனாக அறிமுகமாக உள்ளார்.  மிஷ்கின் தற்போது நடித்து வரும் ‘சவரக்கத்தி’ படத்தின் பணிகளுக்கு இடையிலும் புதுப் படத்திற்கான கதையை எழுதி வருகிறாராம்.

மற்ற நடிக, நடிகையர், தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வும் தற்போது நடைபெற்று வருகிறது. ‘சவரக்கத்தி’ படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும், நவம்பர் மாதம் தான் அடுத்து இயக்கும் இந்தப் புதிய படத்தின் படப்பிடிப்பை மிஷ்கின் துவக்க உள்ளாராம்.

டிரான்ஸ்வேர்ல்டு டெலி கம்யூனிகேஷன் சார்பில் ரகுநந்தன் இப்படத்தைத் தயாரிக்கிறார்.

Read Previous

Inji Iduppazhagi – Size Zero… – Song – Video Teaser

Read Next

திரைப்பட விழாக்களில் ‘கிருமி’