திரைப்பட விழாக்களில் தமிழ்த் திரைப்படங்கள் திரையிடப்படுவது சமீப காலத்தில் அதிகரித்து வருகிறது.
‘காக்கா முட்டை, குற்றம் கடிதல், விசாரணை’ ஆகிய படங்களைத் தொடர்ந்து அடுத்து ‘கிருமி’ திரைப்படமும் இரண்டு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட உள்ளது.
கனடாவில் நடைபெறும் 19ஆவது டொரோன்ட்டா ரீல் ஏசியன் இண்டர்நேஷ்னல் பிலிம் பெஸ்ட்டிவலில் திரையிடப்பட உள்ளது.
அடுத்து மும்பையில் நடைபெற உள்ள 17வது மும்பை திரைப்பட விழாவிலும் கலந்து கொள்ள உள்ளது.
‘காக்கா முட்டை’ படத்தை இயக்கிய மணிகண்டன்தான் ‘கிருமி’ படத்திற்கு கதை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அனுசரண் இயக்கியுள்ள ‘கிருமி’ படத்தில் கதிர், ரேஷ்மி மேனன் மற்றும் பலர் நடித்துள்ளார்கள். வரும் 24ம் தேதி இப்படம் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.