‘ஒரு நாள் கூத்து, ப்ரூஸ் லீ’ படங்களை வாங்கிய ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ்

தமிழ்த் திரையுலகில் தற்போதைக்கு வெற்றியான தயாரிப்பு நிறுவனமாகவும், வினியோக நிறுவனமாகவும் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் விளங்கி வருகிறது.

வித்தியாசமான திரைப்படங்களையும், மக்களின் ரசனைக்கேற்ற திரைப்படங்களையும் வாங்கி வெளியிட்டு தொடர் வெற்றிகளைப் பெற்று வரும் இந்நிறுவனம் தற்போது ‘ஒரு நாள் கூத்து, ப்ரூஸ் லீ’ ஆகிய படங்களின் திரையிடும் உரிமைகளை கெனன்யா பிலிம்ஸ் நிறுவனத்திடமிருந்து வாங்கியுள்ளது.

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் படத்தை வாங்கினாலே அந்தப் படத்திற்கென தனிப் பெயரும், தரமும் ரசிகர்களிடமும் உருவாகியுள்ளது. அது தற்போது இந்த இரண்டு படங்களுக்கும் கிடைத்துள்ளது.

‘ஒரு நாள் கூத்து’ படத்தை நெல்சன் வெங்கடேசன் இயக்க ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். ‘அட்டகத்தி’ தினேஷ், மியா ஜார்ஜ், நிவேதா பெத்துராஜ் மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.

‘ப்ரூஸ் லீ’ படத்தை பிரசாந்த் பாண்டியராஜ் இயக்க ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து நாயகனாக நடிக்கிறார். கீர்த்தி கர்பந்தா இப்படத்தின் நாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.

‘ஒரு நாள் கூத்து’ படம் விரைவில் வெளியாக உள்ளது.

Read Previous

Pichaikkaran – Nooru Samigal – Video Song

Read Next

Actor Sivakumar speaks about Raj Bharath & Natpathikaram 79