கெனன்யா பிலிம்ஸ் தயாரிப்பில் பால்கி இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் படம் ‘சர்வர் சுந்தரம்’.
இப்படத்தில் சந்தானத்தின் ஜோடியாக மராத்திய நடிகை வைபவி ஷான்டில்யா அறிமுகமாகிறார். சில மராத்திய படங்களில் கதாநாயகியாக நடித்துள்ள வைபவியை தமிழுக்கு அழைத்து வருகிறார்கள்.
‘ வைபவியை தமிழில் கதாநாயகியாக அறிமுகம் செய்வதில் நாங்கள் மிகப் பெருமை அடைகிறோம். மூன்று மாதங்களுக்கு மேலாக நாங்கள் கதாநாயகியைத் தேடி வந்தோம். இந்தக் காத்திருப்புக்கு ஒரு அர்த்தம் இருந்தது, இருக்கிறது, என்பதை நாங்கள் புரிந்து கொண்டோம். அவர் பரதத்திலும், கதக் நடனத்திலும் தேர்ந்தவர்.
அழகும் திறமையும் ஒருங்கிணைந்து இருக்கும் வைபவி ஷான்டில்யா தமிழ் ரசிகர்களின் மனதை நிச்சயம் கவருவார்“, என்கிறார் இயக்குனர் பால்கி.