அடுத்த சாதனையில் ‘தெறி’ டிரைலர்

‘தெறி’ டீசர் வெளியாகி 50 நாட்கள் முடிய உள்ள நிலையில் 96 லட்சம் ஹிட்ஸ்களைக் கடந்தும், 3 லட்சம் லைக்குகளை விரைவில் தொடும் நிலையிலும் உள்ளது.

‘வேதாளம்’ டீசர் படைத்த அனைத்து சாதனைகளையும் முறியடித்து இணைய உலகில் விஜய் ரசிகர்களும் சளைத்தவர்கள் இல்லை என்பதை புரிய வைத்த டீசராக ‘தெறி’ டீசர் அமைந்தது.

நேற்று ‘தெறி’ இசை வெளியீட்டின் போதே ‘தெறி’ டிரைலரையும் வெளியிட்டார்கள். யு டியூபிலும் வெளியிடப்பட்ட டிரைலர் 24 மணி நேரத்திற்குள்ளாக சற்று முன் வரை 13 லட்சம் ஹிட்ஸ்களையும், 1, 35,000 லைக்குகளையும் கடந்து புதிய சாதனையை படைத்துள்ளது.

‘தெறி’ டீசர் சாதனையை 24 மணி நேரத்தில் ‘தெறி’ டிரைலர் முறியடித்துள்ளது.

‘தெறி’ டிரைலருக்கு கிடைத்துள்ள வரவேற்பால் அஜித் ரசிகர்கள் டிவிட்டர், ஃபேஸ்புக்கில் எதுவும் செய்ய முடியாமல் தவித்து வருகிறார்கள்.

‘வேதாளம்’ படத்தை விடவும் ‘தெறி’ படம் அதிரடியான ஆக்ஷன் படமாக இருக்கும் என்பது விஜய் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Read Previous

நடிகர் சங்க பொதுக் குழு – நிறைவேறியது என்ன ?

Read Next

Film News Anandan passes away

Most Popular