தமிழ்த் திரையுலகில் தற்போது நம்பிக்கை நட்சத்திரமாக வளர்ந்து கொண்டிருப்பவர் விஜய் சேதுபதி மட்டுமே.
இதுவரை அவரைப் பற்றி எந்த ஒரு கிசுகிசுவோ, தவறான தகவல்களோ அதிகமாக வெளிவரவில்லை.
குறிப்பாக, அவரை வைத்து படத்தைத் தயாரிக்கும் தயாரிப்பாளர்களோ, இயக்குனர்களோ எந்த குறையையும் சொன்னதில்லை.
முதல் முறையாக விஜய் சேதுபதி ஒரு பெரிய நிறுவனத்தின் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.
எஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் கே.வி.ஆனந்த் இயக்க உள்ள இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, டிஆர் இருவரும் நடிக்க உள்ளார்கள்.
இந்தப் படத்தில் நடிப்பதற்காக ஆர்யா, ஜீவா உள்ளிட்ட நடிகர்கள் காத்திருந்தார்கள் என கடந்த சில மாதங்களாகவே செய்திகள் வெளியாகின.
ஆனால், தற்போது அந்தப் படத்தில் விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பது திரையுலகில் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்று முறைப்படி அறிவிக்கப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாக உள்ளது.