‘அர்த்தநாரி’ அடுத்த மாதம் வெளியீடு

இயக்குனர் பாலாவிடம் பணியாற்றிய சுந்தர இளங்கோவன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘அர்த்தநாரி’.

படம் பற்றி தயாரிப்பாளர் முத்தமிழன் கூறியதாவது,

“அர்த்தநாரி’ படத்திற்காக கதாநாயகி அருந்ததி கதாபாத்திரத்துக்கு ஏற்ப நிறைய மெனக் கேட்டு இருக்கிறார். ஒரு போலீஸ் அதிகாரியின் கம்பீரத்தை அப்படியே பிரதிபலித்துள்ளார்.

இந்தப் படத்துக்குப் பிறகு அவர் இன்னமும் உயரத்தைத் தொடுவார். கதாநாயகன் ராம்குமார் முதல் படத்திலேயே இந்த அளவுக்கு நடித்து இருப்பது பெரிய விஷயம் எனக் கூறலாம்.

அர்த்தநாரி இசை வெளியீட்டுக்கு பிறகு படத்தின் பாடல்களால் படத்துக்கு சிறந்த முகவரி கிடைத்திருக்கிறது.

இசை அமைப்பாளர் செல்வ கணேஷ் , கபிலன் வைரமுத்துவின் வரிகளுக்கு அருமையாக இசை அமைத்திருக்கிறார்.

நாசர் சார் ‘அர்த்தநாரி’ படத்தில் நடித்திருப்பது படத்துக்கு பெரிய கௌரவம். ரசிகர்களுக்கு ‘அர்த்தநாரி’ நிச்சயம் பிடிக்கும் படமாக இருக்கும்,” என்கிறார் தயாரிப்பாளர் முத்தமிழன்.

ஏப்ரல் மாதம் இரண்டாவது வாரத்தில் ‘அர்த்தநாரி’ வெளியாகிறது.

Read Previous

பிரபு, ஊர்வசி ஜோடியுடன் ‘உன்னோடு கா’…

Read Next

Mowgli from The Jungle Book comes home !