பிரபல நடிகையான ஜெயப்ரதாவின் மகன் சித்து, ஹன்சிகா மற்றும் பலர் நடிக்கும் படம் ‘உயிரே உயிரே’.
இளமையும் காதலும் வழிந்தோடுகிற இப்படத்தில் ஜோடி என்றால் இப்படியிருக்க வேண்டும் என்று எல்லாரையும் ஏங்க வைக்கும் விதத்தில் இருவருமே அவ்வளவு பொருத்தமாக நிஜ காதல் ஜோடி போலவே நடித்திருக்கிறார்களாம்.
மும்பை டூ சென்னை பிளைட், வழியில் கோவாவில் இறங்குகிறது. அங்கு தான் இருவருக்குள்ளும் இருக்கும் பிரண்ட்ஷிப் காதலாகிறது. அந்த காதலை ஒரு டூயட்டில் சொல்லிவிட்டு போகாமல், இஞ்ச் பை இஞ்ச் ரசிகர்களின் மனதில் மழைத் தூறல் போல இறக்கி வைத்திருக்கிறார் ஏ.ஆர்.ராஜசேகர். அதற்கு இந்த ஒரே ஒரு காட்சி உதாரணம்.
திடீரென ஒரு திருமண நிகழ்ச்சிக்கு செல்கிறார்கள் இருவரும். அதுவரை மாடர்ன் டிரஸ்சில் இருக்கும் ஹன்சிகாவை பட்டுப்புடவை கட்டிக் கொண்டு வரச்சொல்கிறார் சித்து. அவரது விருப்பத்தை நிறைவேற்றுகிற ஹன்சிகா, புடவை, தலை நிறைய மல்லிகைப்பூ சகிதம் அந்த மண்டபத்திற்குள் நுழைய, அப்படியே வைத்த கண் வாங்காமல் பார்க்கிறார் சித்து. அதே நேரம் அந்த கல்யாண மண்டபத்திலிருக்கிற ஐயாயிரம் கண்களும் ஹன்சிகாவை விழுங்க, அதற்கப்புறம் சித்துவுக்கு புரிகிறது. ஹன்சிகாவை தான் மட்டும் சைட் அடிக்கவில்லை. ஒட்டுமொத்த ஆண் வர்க்கமே சைட் அடிக்கிறது என்று.
ஐயோ… தன் காதலிக்கு கண் பட்டால் என்னாவது என்று ஓடோடி வரும் சித்து, தன் கை விரலால் ஹன்சிகாவின் கண் மையிலிருந்து கொஞ்சத்தை தொட்டு எடுத்து… கன்னத்தில் வைப்பார் என்றுதானே நினைப்பீர்கள்? அதுதான் இல்லை. அவர் வைத்த இடமே வேறு…ஹன்சிகாவின் இடுப்பில் வைக்கிறார்.
காதலியின் இடுப்பையும் சேர்த்து பார்த்து ரசிப்பவர்களுக்கு அங்கு திருஷ்டிப் பொட்டு வைத்தால்தானே பொருத்தமாக இருக்கும், அதனால்தான் அங்கு வைக்கிறாராம்.
ஹீரோயினின் தொப்புளை ரசிக்க வைத்த தமிழ் சினிமாவில் இப்போது கொஞ்சம் மாற்றம், அவர்கள் பார்வையை இடுப்புக்கு ஷிப்ட் செய்திருக்கிறார்கள்.