‘றெக்க’ – விரைவில் ஆரம்பம்

விஜய்சேதுபதி நடித்த ‘ஆரஞ்சு மிட்டாய்’ படத்தைத் தயாரித்த B. கணேஷ், அடுத்ததாக மிகப் பிரம்மாண்டமாய் தயாரிக்க இருக்கும் படம் ‘றெக்க’.

விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தை ‘வா டீல்’ படத்தை இயக்கிய ரத்தினசிவா இயக்குகிறார்.

விஜய் சேதுபதி ஜோடியாக லட்சுமி மேனன் முதன் முறையாக நடிக்கிறார்.

இப்படத்துக்கான போட்டோ ஷூட் சமீபத்தில் ஏ.வி.எம் ஸ்டுடியோவில் மிகப் பிரம்மாண்டமான பொருட்செலவில் பிரபல புகைப்படக் கலைஞர் ஜி.வெங்கட்ராமனால் எடுக்கப்பட்டது.

முதல் முறையாக, ஆக்ஷன் ஹீரோ அவதாரம் எடுக்கும் விஜய் சேதுபதியின் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கப் போவது நிச்சயம்.

முழுக்க, முழுக்க பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த ஒரு முழு நீள கமர்ஷியல் திரைப்படமாக இப்படம் உருவாகப் போகிறது.

விரைவில் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.

Read Previous

‘விசாரணை’க்கு தேசிய விருதுகள், தனுஷ் மும்மடங்கு மகிழ்ச்சி

Read Next

இளையராஜாவுக்கு தேசிய விருது, இரட்டிப்பு கொண்டாட்டம் – சசிகுமார்