கேலக்ஸி பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பாக ஸ்ரீனிவாஸ் சம்மந்தம் தயாரிக்கும் படம் ‘காத்தாடி’.
இந்த படத்தில் அவிஷேக் நாயகனாக நடிக்கிறார். இவர் பிரபல நடிகை ஸ்ரீதேவியின் அக்கா மகனும், பிரபல நடிகை மகேஸ்வரியின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது. கதாநாயகியாக தன்ஷிகா நடிக்கிறார்.
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.
விழாவில் பிரபல பின்னணி பாடகி பி.சுசீலா, நடிகை மீனா, மகேஸ்வரி, இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், நடிகர்கள் ஆரி, கயல் சந்திரன், மங்காத்தா அஸ்வின், ஜான் விஜய் மற்றும் படத்தின் இயக்குனர் எஸ்.கல்யாண், நாயகன் அவிஷேக், நாயகி தன்ஷிகா, படத்தின் தயாரிப்பாளர் ஸ்ரீனிவாஸ் சமந்தம், படத்தை வெளியிடும் வி.என்.ரஞ்சித்குமார்,கே.சசிகுகுமார் ஆகியோர் பங்கேற்றனர்.
காத்தாடி இசை வெளியீட்டைத் தொடர்ந்து இளையராஜா, யுவன்சங்கர்ராஜா வெங்கட்பிரபு ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றனர் படக்குழுவினர்.
லிப்பி சினி கிராப்ட்ஸ் வி.என்.ரஞ்சித்குமார் மற்றும் ஒயிட் ஹார்ஸ் ஸ்டியோஸ் கே.சசிகுமார் இந்தப் படத்தை உலகம் முழுதும் வெளியிடுகிறார்கள்.