“சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, யுத்தம் செய், ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு” படங்களை இயக்கிய மிஷ்கின் தற்போது விஷால் கதாநாயகனாக நடிக்கும் ‘துப்பறிவாளன்’ படத்தை இயக்கி வருகிறார்.
இப்படத்தை தொடர்ந்து மைத்ரேயா என்ற புதுமுகம் நடிக்க உள்ள படத்தை இயக்க உள்ளார். இப்படத்தை மைத்ரேயாவின் அப்பாவும், 100 படங்களுக்கும் மேல் ஃபைனான்ஸ் செய்தவருமான ரகுநந்தன் தயாரிக்கிறார்.
மைத்ரேயா லண்டனில் எம்.பி.ஏ. படிப்பை முடித்து பின்னர் மும்பையில் உள்ள நடிப்புக் கல்லூரியில் பயின்று, சினிமாவிற்கு தேவையான அனைத்து பயிற்சிகளையும் கடந்த 2 வருடமாக முறையே கற்று வந்துள்ளார்.
இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் மறைந்த நடிகர் ரவிசந்திரனின் பேத்தி தானியா கதாநாயகியாக அறிமுகமாகிறார்.
விஷால் நடிப்பில் உருவாகிவரும் ‘துப்பறிவாளன்’ படம் முடிந்தவுடன் இன்னும் பெயரிடப்படாத இப்படம் ஆரம்பமாக உள்ளது.