6வது சைமா (SIIMA) விருதுகள் வழங்கும் விழா, கடந்த இரண்டு நாட்களாக சிங்கப்பூரில் நடைபெற்றது.
தென்னிந்திய அளவில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிப் படங்களுக்கு தனித் தனியாக விருதுகளை வழங்கி வருகிறார்கள்.
அதில் தமிழ்த் திரையுலகத்திற்கான விருதுகளைப் பெற்றவர்கள் விவரம்…
சிறந்த திரைப்படம் – தனி ஒருவன்
சிறந்த இயக்குனர் – விக்னேஷ் சிவன் (நானும் ரௌடிதான்)
சிறந்த நடிகர் – விக்ரம் (ஐ)
சிறந்த நடிகை – நயன்தாரா (நானும் ரௌடிதான்)
சிறந்த துணை நடிகர் – பிரகாஷ் ராஜ் (ஓ காதல் கண்மணி)
சிறந்த துணை நடிகை – ராதிகா சரத்குமார் (தங்கமகன்)
சிறந்த நடிகர் எதிர் கதாபாத்திரம் – அருண் விஜய் (என்னை அறிந்தால்)
சிறந்த இசையமைப்பாளர் – அனிருத் (நானும் ரௌடிதான்)
சிறந்த பாடலாசிரியர் – வைரமுத்து (ஓ காதல் கண்மணி)
சிறந்த பின்னணிப் பாடகர் – அனிருத் (தங்கமே… – நானும் ரௌடிதான்)
சிறந்த பின்னணிப் பாடகி – ஸ்வேதா மோகன் (என்ன சொல்ல… – தங்கமகன்)
சிறந்த நகைச்சுவை நடிகர் – ஆர்ஜே பாலாஜி (நானும் ரௌடிதான்)
சிறந்த அறிமுக நடிகர் – ஜி.வி.பிரகாஷ் (டார்லிங்)
சிறந்த அறிமுக நடிகை – கீர்த்தி சுரேஷ் (இது என்ன மாயம்)
‘நானும் ரௌடிதான்’ படத்திற்கு மட்டும் 5 விருதுகள் கிடைத்துள்ளன.