‘சோலோ’ படத்திற்கு ரஜினிகாந்த் வாழ்த்து

துல்கர் சல்மான் கதாநாயகனாக நடிக்க, பிஜாய் நம்பியார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘சோலோ’.

இப்படத்தின் தயாரிப்பாளர் அனில் ஜெயின், இயக்குனர் பிஜாய் நம்பியார், ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து ‘சோலோ’ படத்தின் ட்ரைலரை காண்பித்தனர். அதனைப் பார்த்த ரஜினிகாந்த், ட்ரைலர் மிக அருமையாக இருப்பதாகக் கூறி ‘சோலோ’ படத்திற்கு தனது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார் .

ரஜினிகாந்தின் பாராட்டு ‘சோலோ’ படக்குழுவினருக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

இந்த ‘சோலோ’ படத்தில் நான்கு பேருடைய, நான்கு விதமான கதைகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு கதையிலும் துல்கர் சல்மான்  நடிக்கிறார். மற்ற கதாபாத்திரங்களில் வேறு வேறு நடிகர், நடிகைகள் நடிக்கிறார்கள்.

நேகா சர்மா, டினோ மோரியா, ஸ்ருதி ஹரிஹரன், தன்ஷிகா, ஆர்த்தி வெங்கடேஷ்  நான்கு கதைகளின் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள்.

தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் இப்படம் அக்டோபர் 5ம் தேதி வெளியாகிறது.

Read Previous

ஆணவக் கொலைகளைப் பற்றிய யதார்த்தப் படம் ‘களிறு’

Read Next

மீண்டும் தமிழ்ப் படங்களில் நடிப்பாரா மகேஷ் பாபு ?