ஜெய், அஞ்சலி மற்றும் ஜனனி நடிப்பில், சினிஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பலூன்’ படத்தை ’70mm Entertainment’ நிறுவனம் தயாரித்துள்ளது . யுவன் ஷங்கர் ராஜா இசையில் ‘பலூன்’ உருவாகியுள்ளது.
சென்சார் குழுவின் சான்றிதழ் பெறுவதற்கு சென்ற ‘பலூன்’, எந்தவித கட்டும் இன்றி U/A சான்றிதழ் பெற்றுள்ளது.
இது குறித்து இயக்குனர் சினிஷ் பேசுகையில், ” அருமையாக வந்துள்ள இப்படத்தில் ஒவ்வொரு காட்சிக்கும் ஒவ்வொரு ஷாட்டுக்கும் சம்பந்தம் இருப்பதால், எந்த விட கட்டும் இல்லாமல் படத்தை வெளிக்கொண்டுவருவதில் முனைப்போடு இருந்தேன்.
படத்தைப் பார்த்த, சென்சார் குழுவினர் எந்த விட கட்டும் இன்றி U/A சான்றிதழ் வழங்கினர். எல்லா வேலைகளும் முடிந்து ‘பலூன்’ ரிலீசுக்கு தயாராக உள்ளது. மிக விரைவில் ரிலீஸ் செய்யப்படும்,” என்கிறார் இயக்குனர்.