விடிவி கணேஷ் தயாரிப்பில் சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் ‘சக்க போடு போடு ராஜா’, மிகுந்த பொருட்செலவில் பிரமாண்டமான முறையில் தயாராகும் படம் .
கதாநாயகன் சந்தானம் அறிமுக பாடல் காட்சி சமீபத்தில் படமாக்கபட்டது.
முதல் முறையாக ஐந்து பிரபல நடன இயக்குனர்களான ராஜு சுந்தரம் , ஸ்ரீதர், தினேஷ், நோபல், ஜானி ஆகியோர் இப்பாடலுக்கு பணியாற்றினர்.
“கலக்கு மச்சா டவுளத்துள
கால வாரும் காலத்திலே
கலங்க நா கோழையில்லே
களத்திளே இறங்கி காளபோல
ரைட்டு தாட்டு உள்ளத்திலே
வெச்சு இருக்கும் நல்ல புள்ள”
சிம்பு இசை அமைக்க, ரோகேஷ் பாடல் எழுத, அனிருத் பாடிய இந்தப் பாடல்தான் படமாக்கப்பட்டது.
G.L.சேதுராமன் இயக்கத்தில் அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்ய படத்தொகுப்பை ஆன்டனி செய்கிறார் .முக்கிய கதாபாத்திரத்தில் விவேக் நடிக்க சம்பத் ராஜ் ,ரோபோ சங்கர், சஞ்சனா சிங்,விடிவி கணேஷ் ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்தில் சிம்பு இசையில் யுவன் ஷங்கர் ராஜா, டி.ராஜேந்தர், உஷா ராஜேந்தர் ஆகியோர் பாடியுள்ளனர் .
நவம்பர் 14ம் தேதி இப்படத்தின் இசை வெளியீடு நடைபெற உள்ளது.