தெலுங்கில் சுகுமார் இயக்கத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பில் நாக சைதன்யா, தமன்னா மற்றும் பலர் நடிக்க 2011ம் ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட்டான படம் ‘100 % லவ்’.
இப்படத்தை தமிழில் ‘100 % காதல்’ என்ற பெயரில் ரீமேக் செய்கிறார்கள். தெலுங்கில் படத்தை இயக்கிய சுகுமார் தமிழில் படத்தைத் தயாரிக்கிறார். அவருடைய நண்பரான சந்திரமௌலி இப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.
ஜி.வி. பிரகாஷ்குமார் நாயகனாக நடிக்க, தெலுங்கில் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தி வெற்றி பெற்ற ‘அர்ஜுன் ரெட்டி’ படக் கதாநாயகி ஷாலின் பான்டே இப்படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். யுவன் மயில்சாமி, ஜெயசித்ரா, ரேகா மற்றும் பலர் இப்படத்தில் நடிக்கிறார்கள்.
இப்படத்தின் பூஜையும், முதல் நாள் படப்பிடிப்பும் இன்று சென்னையில் நடைபெற்றது. இயக்குனர் பாரதிராஜா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
இளைஞர்கள் கொண்டாடும் ஒரு காதல் படமாக இப்படம் இருக்கும் என இயக்குனர் சந்திரமௌலி கூறுகிறார்.
2018 கோடை விடுமுறையில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.