ஏ 3 வி சினிமாஸ் மூலம் தயாரித்து விமல் நாயகனாக நடிக்கும் படம் ‘மன்னர் வகையறா’.
இப்படத்தை தனுஷ் நடித்த ‘தேவதையைக் கண்டேன், திருவிளையாடல் ஆரம்பம்’, விஷால் நடித்த ‘மலைக் கோட்டை, பட்டத்து யானை’ ஆகிய படங்களை இயக்கிய பூபதி பாண்டியன் இயக்குகிறார்.
விமல் ஜோடியாக கயல் ஆனந்தி நடிக்க முக்கிய வேடங்களில் பிரபு, சரண்யா, ரோபோ சங்கர், நாசர், யோகிபாபு, ஜெயபிரகாஷ், கார்த்திக் (யாரடி நீ மோகினி), சாந்தினி என மாபெரும் நட்சத்திரப் பட்டாளமே இந்தப் படத்தில் நடிக்கிறது.
பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்ய ஜாக்ஸ் பிஜாய் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக் கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
நவம்பர் 8ஆம் தேதி இப்படத்தின் ட்ரெய்லரை வெளியிட இருக்கிறார்கள். அதைத் தொடர்ந்து 2018 ஜனவரியில் பொங்கல் திருநாளன்று படத்தை வெளியிட முடிவு செய்துள்ளார்கள்.