‘ஹர ஹர மஹாதேவகி’ படத்தின் வெற்றிக்குப் பிறகு கௌதம் கார்த்திக், இயக்குனர் சந்தோஷ் பி. ஜெயக்குமார் கூட்டணியின் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாதம் துவங்கியது.
இதில் ‘சர்வர் சுந்தரம்’ மற்றும் ‘சக்கப் போடு போடு ராஜா’ படங்களில் நடிக்கும் நடித்த வைபவி சாண்டில்யா கதாநாயகியாக நடிக்கிறார். சந்திரிகா ரவி மற்றும் யாஷிகா ஆனந்த் ஆகியோரும் நாயிகிகளாக நடிக்கிறார்கள். சந்திரிகா இந்த படத்தில் பேயாகவும், யாஷிகா முக்கியமான கதாபாத்திரத்திலும் நடிக்கிறார்கள்.
தாய்லாந்தில் முதற் கட்டப் படப்பிடிப்பை முடித்துவிட்டு படக்குழு சென்னைக்குத் திரும்பியது. தற்போது சென்னையில் ஒரு பாடலுக்கான படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து மீண்டும் தாய்லாந்திற்கு இறுதிக் கட்டப் படப்பிடிப்பிற்காக இக்குழு செல்ல உள்ளது.
இந்தப் படத்தில் ராஜேந்திரன், கருணாகரன், பால சரவணன், மதுமிதா, மீசைய முறுக்கு புகழ் ஷா ரா ஆகியோரும் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
பாலமுரளி பாலு இசையமைக்க, தருண் பாலாஜி ஒளிப்பதிவு செய்கிறார்.
2018ஆம் ஆண்டு துவக்கத்திலேயே ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.