‘மொழி’ ராதாமோகன் இயக்கத்தில் மீண்டும் ஜோதிகா ?

திருமணத்திற்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்த ஜோதிகாவுக்கு அவர் கதாநாயகியாக நடித்த போது கிடைத்த கதாபாத்திரங்களைக் காட்டிலும், தற்போது பல நல்ல கதாபாத்திரங்கள் கிடைத்து வருகின்றன. ’36 வயதினிலே, மகளிர் மட்டும், நாச்சியார்’ என திருமணத்திற்குப் பிறகு ஜோதிகா நடித்துள்ள படங்களில் அவருடைய கதாபாத்திரங்கள் வித்தியாசமாக அமைந்திருந்தன.

தற்போது மணிரத்னம் இயக்கத்தில் ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தில் ஜோதிகா நடித்து வருகிறார். அந்தப் படத்துடன் அடுத்து ‘மொழி’ படத்தை இயக்கிய ராதாமோகன் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படம் ஹிந்தியில் வித்யா பாலன் நடித்து வெளிவந்த ‘தும்ஹாரி சுலு’ என்ற படத்தின் ரீமேக் ஆக உருவாக உள்ளது.

அதிகம் படிக்காத ஒரு குடும்பத் தலைவி, ரேடியோ ஒன்றில் ஆர்ஜே-வாக வேலைக்குச் சேர்கிறார். அதன் பின் அவர் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள்தான் இந்த ‘தும்ஹாரி சுலு’ படத்தின் கதை. தமிழில் இப்படத்தை ரீமேக் செய்வதற்கான வேலைகள் நடந்து வருகின்றன. விரைவில் அறிவிப்பு வரலாம்.

Read Previous

நண்பனுக்காக தயாரிப்பாளர் ஆன சிவகார்த்திகேயன்

Read Next

‘ஏண்டா தலையில எண்ண வெக்கல’, தலைப்பால் கிடைத்த புகழ்