இன்றைய டிஜிட்டல் உலகத்தில் பணம் சம்பாதிக்கும் ஒரு வழியாக சமூக வலைத்தளங்கள் உள்ளன.
பல பிரபலங்கள் அதன் மூலம் லட்சக் கணக்கான பணத்தை வருமானமாகப் பெறுகிறார்கள். அவர்களைத் தொடர்பவர்களின் எண்ணிக்கை, அவர்களின் பதிவுகளுக்குக் கிடைக்கும் லைக்குகள், ஷேர் ஆகியவற்றை வைத்து அவர்களுக்கான தொகை எவ்வளவு என்பது நிர்ணயிக்கப்படுகிறது.
சினிமா நட்சத்திரங்கள், கிரிக்கெட் வீரர்கள் எனப் பலரும் அது போல சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.
சமீபத்தில், மலையாளத் திரையுலகில் புதுமுக நடிகையான பிரியா பிரகாஷ் வாரியர் யு டியூபில் ஒரு ‘சென்சேஷன்’ஐ உருவாக்கினார். புருவங்களை அசைத்து அவர் காதல் பார்வை பார்த்த பாடல் இந்திய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதன் பின்னர் பிரியா பிரகாஷ் வாரியரை சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம்-ல் பல லட்சம் பேர் பின் தொடர ஆரம்பித்தார்கள்.
தற்போது அவருடைய கணக்கை 50 லட்சம் பேர் பின் தொடர்கிறார்கள். அது மட்டுமல்ல அவருடைய பதிவு ஒவ்வொன்றையும் குறைந்த பட்சம் 10 லட்சம் பேராவது பார்த்துவிடுகிறார்கள்.
அதனால், அவருடைய இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் சில பொருட்களின் விளம்பரங்களை வெளியிட விளம்பர நிறுவனங்கள் அவரை அணுகியுள்ளன.
அதற்கு 8 லட்ச ரூபாய் வரை அவருக்குத் தர தயாராக இருக்கிறார்களாம்.
பிரபல ஹிந்தி நட்சத்திரங்கள் கூட அவ்வளவு தொகையைப் பெறுவதில்லை என்கிறார்கள்.
பிரியாவின் புருவ அசைவு அவருக்கு பல லட்சங்களைக் கொட்டக் காத்திருக்கிறது.