திருடர்களுக்கு பயந்து நள்ளிரவில் வந்த ரவுடி ‘காலா’

திருடர்கள் பெரியவர்களா, ரவுடிகள் பெரியவர்களா என்று கேட்டால் நிச்சயம் திருடர்கள்தான் பெரியவர்கள்.

“இந்த கரிகாலனோட முழு ரவுடித்தனத்த பாத்தது இல்ல..ல ..? பாப்பீங்க!!!” என்று சில நாட்களுக்கு முன்பே ‘காலா’ படத்தின் டீசர் பற்றிய தகவலை வெளியிடும் போது மிரட்டலாக டிவிட்டரில் பதிவிட்டார் ‘காலா’ படத்தின் தயாரிப்பாளர் தனுஷ்.

ஆனால், சில திருடர்கள் சமூக வலைத்தளங்களில் திருட்டுத்தனமாக ‘காலா’ டீசரை நேற்றே பதிவிட்டு விட்டனர். பரபரவெனப் பரவியது அந்த ‘காலா’ டீசர்.

வேறு வழியில்லாமல் அந்த திருடர்களுக்குப் பயந்து வேறு வழியில்லாமல் ‘காலா’ படத்தின் டீசரை நள்ளிரவு 12 மணி அளவில் ‘காலா’ டீசரை வெளியிட்டார்கள்.

“காலான்னா கருப்பு, காலன் கரிகாலன், சண்டை போட்டு காக்கறவன்”,

“செட்டிங்கா, வேங்கையன் மவன் ஒத்தையில நிக்கன், தில்லிருந்தா மொத்தமா வாங்கல”, என்ற வீர வசனங்கள் டீசரில் இடம் பெற்றுள்ளன.

என்ன இருந்தாலும், ‘சண்டை போட்டு காக்கறவன், தில்லிருந்தா மொத்தமா வாங்கல, முழு ரவுடித்தனத்த பாத்தது இல்ல, பாப்பீங்க’ என்றெல்லாம் கடைசியில் டீசர் வெளியீட்டிலேயே வீணாகிப் போய்விட்டன.

திருடர்களால் பயந்து நள்ளிரவில் வந்துவிட்டார் அந்த ரவுடி ‘காலா’.

Read Previous

ரஜினிகாந்த் நடிக்கும் ‘காலா’ – டீசர்

Read Next

காலா – தமிழ், தெலுங்கு, ஹிந்தி – டீசர்கள்