மலையாளத்தில் 2015 ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘பாஸ்கர் தி ராஸ்கல்’.
இயக்குனர் சித்திக் இப்படத்தை ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ என்ற பெயரில் தமிழில் இயக்கி உள்ளார்.
அரவிந்த்சாமி நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக அமலாபால் நடிக்கிறார்.
‘தெறி’ பேபி நைனிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், நாசர், சூரி, ரோபோ சங்கர், ரமேஷ் கண்ணா, சித்திக், மாஸ்டர் ராகவ், ஆகியோருடன் மிரட்டலான வில்லன் வேடத்தில் பாலிவுட் நடிகர் அஃப்தாப் ஷிவ்தசானி நடித்துள்ளார்.
அம்ரேஷ் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு விஜய் உலகநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரமேஷ் கண்ணா வசனம் எழுதியுள்ளார்.
ஆக்ஷன் மற்றும் காதலை மையமாகக் கொண்ட ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ திரைப்படம் குடும்பத்து ரசிகர்களையும் மட்டுமில்லாமல் அனைத்து ரசிகர்களளையும் கவரும் வகையில் ஒரு கமர்ஷியல் படமாக உருவாகியுள்ளது.
இப்படத்தை ஹர்ஷினி மூவீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. பரதன் பிலிம்ஸ் இப்படத்தினை தமிழகம் முழுவதும் வருகின்ற மார்ச் 29 அன்று ரிலீஸ் செய்ய உள்ளது.