தமிழ்த் திரையுலகின் முக்கியமான நடிகர்களில் விக்ரம் குறிப்பிட வேண்டியவர். பல வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து தேசிய விருதும் பெற்றவர்.
அவருடைய மகன் துருவ் தற்போது பாலா இயக்கத்தில் ‘வர்மா’ படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். துருவ் அறிமுகமாகும் முதல் படம் இது.
விக்ரமின் அப்பா ஜான் விக்டரும் ஒரு நடிகர்தான்.
விக்ரமின் குடும்பத்திலிருந்து அவருடைய மகன் நடிக்க வந்துள்ளதைப் போல, மற்றொரு நடிகரும் நடிக்க வருகிறார். அவர் விக்ரமின் சகோதரி மகன் அர்ஜுமன்.
பெயரிடப்படாத ஒரு புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார்.
சினிமா பள்ளியில் நடிப்புக் கலையை முறையே பயின்றுள்ள இவருக்கு சிறு வயது முதலே நடிப்பின் மேல் உள்ள ஈர்ப்பால் கதாநாயகனாக வேண்டும் என்று ஆசையாம்.
குடும்பத்தினரின் ஆதரவோடு அறிமுகமாகிறார் அர்ஜுமன்.