‘நடிகையர் திலகம்’ – மே 9ம் தேதி ரிலீஸ்

தமிழ், தெலுங்கு திரையுலகங்களில் தனது நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்த நடிகையான சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் தயாராகி வருகிறது.

தமிழில் ‘நடிகையர் திலகம்’ என்றும் தெலுங்கில் ‘மகாநதி’ என்றும் பெயரிடப்பட்டுள்ளது.

இப்படம் மே மாதம் 9ம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் இன்று அறிவித்துள்ளனர்.

இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிகை சாவித்ரி கதாபாத்திரத்திலும், துல்கர் சல்மான் ஜெமினி கணேசன் கதாபாத்திரத்திலும் நடிக்கிறார்கள். மற்றும் சமந்தார், விஜய் தேவரகொன்டா, பிரகாஷ்ராஜ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

நாக் அஸ்வின் இயக்கத்தில், மிக்கி ஜே மேயர் இசையமைப்பில் வைஜெயந்தி மூவீஸ் தயாரிப்பில் இப்படம் உருவாகி வருகிறது.

சமீபத்தில் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், துல்கர் சல்மான் ஆகியோரது கதாபாத்திரத் தோற்றங்கள் சமூக வலைத்தங்களில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Read Previous

தலைவன் ஆகும் தகுதி உடையவரா ரஜினி – கரு பழனியப்பன்

Read Next

ஒரே மாதத்தில் 3 படங்களை முடித்த சமந்தா