மெட்ராஸ் என்டர்பிரைசஸ் நந்தகோபால் தயாரிப்பில், சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார், அஞ்சலி, அதுல்யா மற்றும் பலர் நடிக்கும் ‘நாடோடிகள் 2’ படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு இன்று நிறைவடைந்தது.
இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் 4ம் தேதி மதுரையில் ஆரம்பமானது. 16ம் தேதி முதல் திரையுலகத்தில் எந்தப் படப்பிடிப்பும் நடத்தக் கூடாது என தயாரிப்பாளர் சங்கம் கூறியிருந்தது.
ஆனால், ‘நாடோடிகள் 2’ குழுவினர் அவர்களது படப்பிடிப்பை நடத்த சிறப்பு அனுமதி பெற்று நடத்தி வந்தனர். 23ம் தேதி வரை தயாரிப்பாளர் சங்கம் அனுமதி அளித்திருந்த நிலையில் ஒரு நாள் முன்னதாக இன்றே அவர்கள் படப்பிடிப்பை முடித்துவிட்டனர்.
தற்போது திரையுலகத்தில் நடந்து வரும் ஸ்டிரைக் முடிந்ததும் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடைபெற உள்ளது.