மிஸ்டர் சந்திரமௌலி, படப்பிடிப்பு நிறைவு

திரு இயக்கத்தில் சாம். சி.எஸ் இசையமைப்பில் கௌதம் கார்த்திக், ரெஜினி, வரலட்சுமி, கார்த்திக் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘மிஸ்டர் சந்திரமௌலி’.

இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிவடைந்துவிட்டது. சில நாட்களுக்கு முன்பு தாய்லாந்தில் நடைபெற்ற பாடல் காட்சிகளுடன் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவுற்றது.

இது பற்றி படத்தின் தயாரிப்பாளரான ஜி. தனஞ்செயன் கூறியதாவது,

“சரியான திட்டமிடல், நல்ல செயல்பாடு, படக்குழுவின் சிறப்பான ஒத்துழைப்பு ஆகியவை இல்லையென்றால் இது சாத்தியப்பட்டிருக்காது. ஒட்டுமொத்த மிஸ்டர் சந்திரமௌலி படக்குழுவும் ஆரம்பத்தில் இருந்தே அதிகமான உற்சாகம், ஆற்றலை கடுமையாக வெளிப்படுத்தினர்.

தயாரிப்பாளர் சங்கம் வெளிப்புற படப்பிடிப்பை நிறுத்தச் சொல்லி உத்தரவு பிறப்பித்தபோது ஒட்டுமொத்த குழுவும் சீக்கிரம் முடிக்க வேண்டும் என்று காலில் நெருப்பை கட்டிக் கொண்டு வேலை பார்த்தனர்.

திட்டமிட்ட நேரத்தில் படப்பிடிப்பை முடித்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். இந்த காலகட்டத்தில் மல்ட்டி ஸ்டாரர் படங்களை குறிப்பிட்ட காலத்தில் முடிப்பது எளிதான காரியம் கிடையாது.

நவரச நாயகன் கார்த்திக், கௌதம் கார்த்திக், ரெஜினா கஸாண்ட்ரா, சதீஷ், வரலட்சுமி சரத்குமார், இயக்குனர் மகேந்திரன், இயக்குனர் அகத்தியன் என அனைத்து பெரிய நட்சத்திரங்களுமே மற்ற படங்களிலும் பிஸியாக இருப்பவர்கள் தான்.

இந்த பணிகளை மென்மையாக முடிக்க நிறைய முயற்சிகள் தேவைப்பட்டன. குறிப்பாக பிஸியான இடங்கள், பிஸியான நகரங்கள், நாடுகள் ஆகியவற்றில் நான்கு மாதங்களில் படப்பிடிப்பை நடத்தி முடிக்க வேண்டிய கூடுதல் அழுத்தமும் எங்களுக்கு இருந்தது.

படத்தின் கேப்டன் இயக்குனர் திரு, ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம் நாதன், கலை இயக்குனர் ஜாக்கி ஆகியோரின் துணையோடு ஒட்டுமொத்த படத்தையும் அணுகிய விதம் சிறப்பானது. ஒரு சில படங்களிலேயே ரசிகர்களைக் கவர்ந்த சாம் சிஎஸ் இந்த படத்திற்கு இசையமைப்பது கூடுதல் ஈர்ப்பைக் கொடுத்திருக்கிறது.

படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் சினிமா சங்கங்களின் வேலை நிறுத்தம் முடிந்தவுடன் துவங்கும். அதைத் தொடர்ந்து உலகம் முழுவதும் படம் வெளியாகும்,” என்கிறார் தயாரிப்பாளர் தனஞ்செயன்.

Read Previous

ஒரே நேரத்தில் 2 படங்களில் சிவகார்த்திகேயன்

Read Next

‘தொட்ரா’ படப்பிடிப்பு நிறைவு