காதலரை, வருங்காலக் கணவர் என சொன்ன நயன்தாரா

நடிகை நயன்தாராவுக்கும், இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் காதல் என்பது ஊரறிந்த விஷயம். இருவரும் கடந்த சில வருடங்களாகவே ஒரே வீட்டில் ஒன்றாக வாழ்ந்து வருவதாகக் கூறப்படுகிறது.

நயன்தாரா சிம்பு, பிரபுதேவா ஆகியோரைக் காதலித்து அவர்களை விட்டுப் பிரிந்தவர். பின்னர் விக்னேஷ் சிவனுடன் பழக்கம் ஏற்பட்டு அவரைக் காதலிக்கத் தொடங்கினார்.

இருவரும் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்ற போதெல்லாம் எடுத்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்கள்.

‘நானும் ரௌடிதான்’ படத்தில் நயன்தாரா நடித்த போது, அவரும் அப்படத்தின் இயக்குனரான விக்னேஷ் சிவனும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களும் வெளியாகின. அப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்த போது கூட அவர்களது காதலைப் பற்றிப் பலரும் பேசினார்கள்.

இருவரும் எப்போது திருமணம் செய்து கொள்வார்கள் என்ற கேள்வி நீண்ட காலமாகவே இருந்தது. சமீபத்தில் நடந்த விருது வழங்கும் விழா ஒன்றில் நயன்தாரா ‘வருங்காலக் கணவர்’ என முதல் முறையாக அவருடைய காதலைப் பற்றி வெளிப்படையாகப் பேசியிருக்கிறார்.

அந்த விழாவில் “என் அம்மா, அப்பா, சகோதரர், வருங்காலக் கணவர் ஆகியோர் எனக்கு தொடர்ச்சியாகத் தரும் ஆதரவுக்கு நன்றி,” என்று பேசினார்.

அந்த காதலர் விக்னேஷ் சிவன்தான் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். நயன்தாரா கைவசம் தமிழ், தெலுங்கு படங்கள் இருப்பதால் இந்த ஆண்டில் இவர்கள் திருமணம் நடக்க வாய்ப்பில்லை. அடுத்த ஆண்டு நடக்க வாய்ப்புள்ளது.

Read Previous

விமானம் பற்றி அறிய கல்லூரிக்குச் சென்ற அஜித்

Read Next

‘றெக்க’ இயக்குனருடன் சிலம்பரசன் இணைவாரா ?