‘றெக்க’ இயக்குனருடன் சிலம்பரசன் இணைவாரா ?

‘றெக்க’ பட இயக்குனர் இரத்தின  சிவா,  சமீபத்தில் நடிகர் சிலம்பரசனை சந்தித்துப் பேசியுள்ளார்.
இரத்தினசிவா சொன்ன கதையில் சிலம்பரசன் ஆர்வமாக உள்ளார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் இந்தத்  திட்டம் ஆரம்பக்  கட்டத்தில்தான் உள்ளது.  வரும் நாட்களில் மட்டுமே விஷயங்களை உறுதி செய்ய முடியும்.
சிலம்பரசன் தற்போது இயக்குனர் மணிரத்தினத்தின் ‘செக்க சிவந்த வானம் ‘படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இப்படம் இன்னும் இரண்டு மாதத்தில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
‘றெக்க’ படத்தை தவிர்த்து அருண் விஜய் நடித்த ‘வா டீல் ‘ படத்தை இரத்தினசிவா  இயக்கி முடித்துள்ளார். ஆனால், பைனான்ஸ் பிரச்சினையால் அந்தப் படம் வருவது தாமதமாகி வருகிறது.

Read Previous

காதலரை, வருங்காலக் கணவர் என சொன்ன நயன்தாரா

Read Next

யூ டியூப் நட்சத்திரங்கள் நடித்த ‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’