‘விவேகம்’ படத்தின் தோல்விக்குப் பிறகு அஜித், மீண்டும் சிவா இயக்கத்தில் நடிக்கவிருக்கும் படம் ‘விஸ்வாசம்’.
இப்படத்திற்கான அரங்க அமைப்பு வேலைகள் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது. தற்போது தமிழ்த திரையுலகத்தில் நடைபெற்று வரும் வேலை நிறுத்தப் போராட்டம் முடிந்ததும் படப்பிடிப்புகள் ஆரம்பமாக உள்ளன.
இதனிடையே, வில்லன் நடிகரான ஆர்.கே.சுரேஷ் அவருடைய டிவிட்டரில் ‘விஸ்வாசம்’ படத்தின் இயக்குனர் சிவா உடன் இருக்கும் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்திருந்தார்.
அதைப் பார்த்ததும் அஜித் ரசிகர்கள் பொங்கி எழுந்துவிட்டார்கள். அவர்கள் அனைவரின் குரலும் ஒரே மாதிரியான குரலாகவே டிவிட்டரில் பதிவாகியுள்ளது.
‘‘விஸ்வாசம்’ படத்தை இயக்குனர் சிவா ஒழுங்காக எடுக்க வேண்டும், படம் பற்றிய தகவல்களை அவ்வப்போது தெரிவித்துக் கொண்டே இருக்க வேண்டும்” என கடுமையான வார்த்தைகளில் பதிவிட்டுள்ளார்கள்.
கடந்த வருடம் விஜய் நடித்து வெளிவந்த ‘தெறி’ படம் பெரும் வசூல் சாதனை படைத்த காரணத்தால், அஜித் ரசிகர்கள் ‘விஸ்வாசம்’ படத்தை பெரிய வெற்றிப் படமாக அமைய வேண்டும் என்று இப்போதே எதிர்பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.