இயக்குனர் சித்திக் இயக்கத்தில் அரவிந்த்சாமி, அமலா பால் மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’.
நாசர், சூரி, ரோபோ சங்கர், ரமேஷ் கண்ணா, சித்திக், மாஸ்டர் ராகவ், பேபி நைனிகா ஆகியோருடன், மிரட்டலான வில்லன் வேடத்தில் பாலிவுட் நடிகர் அஃப்தாப் ஷிவ்தசானி நடித்துள்ளார். அம்ரேஷ் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு விஜய் உலகநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். நடிகர் ரமேஷ் கண்ணா வசனம் எழுதியுள்ளார்.
இப்படம் ஏப்ரல் 27 ஆம் தேதி வெளியாவக இருந்தது. தற்போது இந்த படத்தின் வெளீயீட்டு தேதி மாற்றப்பட்டு உள்ளது.
‘அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார்’ திரைப்படம் ஆங்கிலம் மற்றும் இந்திய மொழிகளில் ஏப்ரல் 27 ஆம் தேதியன்று ரிலீஸ் ஆகிறது. இதனால் பெரிய பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ திரைப்படம் முக்கியமான நகரங்களில் திரையரங்குகளின் பற்றாக்குறையின் காரணமாகவும், எல்லா பகுதிகளிலும் மக்கள் அனைவரும் பார்க்க வேண்டுமென்ற நோக்கத்துடனும் இப்படத்தினை மே மாதம் 11 ஆம் தேதியன்று வெளியிட படக்குழு திட்டமிட்டு உள்ளனர் .
ஹர்ஷினி மூவீஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை பரதன் பிலிம்ஸ் வெளியிடுகிறது.