தமிழ்த் திரையுலகத்தில் அடுத்த பண்டிகை நாளாக வரவிருப்பது வினாயகர் சதுர்த்தி.
செப்டம்பர் மாதம் 13ம் தேதி வியாழக் கிழமை வர உள்ள வினாயகர் சதுர்த்தி அன்று சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘சீமராஜா’ படத்தை வெளியிடப் போவதாக அந்த நிறுவனம் ஏற்கெனவே அறிவித்துள்ளது.
அதே தினத்தில் விஷால் நடித்துள்ள ‘சண்டக்கோழி 2’ படமும் வெளியாகும் எனத் தெரிகிறது. அன்றைய தினம் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளதாக படத்தின் தயாரிப்பாளரும், நாயகனுமான விஷால் தெரிவித்துள்ளார்.
இதனால், வினாயகர் சதுர்த்தி அன்று சிவகார்த்திகேயன், விஷால் இடையே நேரடிப் போட்டி ஏற்பட்டுள்ளது.
விஷால் நடித்துள்ள ‘இரும்புத்திரை’ படம் வெற்றிப் படமாக அமைந்துள்ளது. அதனால், ‘சண்டக்கோழி 2’ படத்திற்கும் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.
சிவகார்த்திகேயன், பொன்ராம் கூட்டணியில் இதற்கு முன் வெளிவந்த ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன்’ பிரம்மாண்டமான வெற்றிப் படங்கள். அதனால் ‘சீமராஜா’ படத்திற்கும் வரவேற்பு அதிகமாகவே இருக்கிறது.
இரண்டு படங்களுமே கிராமத்துக் கதைகள் என்பதால் அனைத்து ரசிகர்களுக்குமான படங்களாக இருக்கும்.