மகேஷ்பாபு நடிக்கும் ‘அனிருத்’, ஆகஸ்ட் 3 வெளியீடு

சித்தாரா எண்டர்டைன்மெண்ட்ஸ் வழங்க சுவாதி, வர்ஷினியின் பத்ரகாளி பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் பத்ரகாளி பிரசாத், இணை தயாரிப்பாளர்கள் சத்யசீத்தால, வெங்கட்ராவ் தயாரித்துள்ள படம் ‘அனிருத்’.

பத்ரகாளி பிலிம்ஸ் ஏற்கனவே “செல்வந்தன், பிரபாஸ் பாகுபலி, இது தாண்டா போலீஸ், மகதீரா, புருஸ்லீ, எவண்டா” உட்பட பல படங்களை தெலுங்கிலிருந்து தமிழுக்கு மொழி மாற்றம் செய்து வெளியிட்டிருக்கிறது.

அந்த வரிசையில் தெலுங்கில் வெளிவந்த ‘பிரம்மோற்சவம்’ படம் தமிழில் ‘அனிருத்’ என்ற பெயரில் தயாராகியுள்ளது

இந்த படத்தில் மகேஷ்பாபு நாயகனாக நடிக்க, காஜல்அகர்வால், சமந்தா, பிரனிதா ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளார்கள். மற்றும் சத்யராஜ், நாசர், ரேவதி, ஷாயாஜி ஷிண்டே, ஜெயசுதா, முகேஷ்ரிஷி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

இப்படம் ஆகஸ்ட் 3ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Read Previous

பேய் பசி – அன்புக்காக இசையமைத்த யுவன்ஷங்கர் ராஜா

Read Next

யாருடைய கட்டுப்பாட்டிலும் நான் இல்லை – ஸ்ரீ பிரியங்கா

Most Popular