மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் உடல் நேற்று இரவு அண்ணா நினைவிடத்திற்கு உள்ளே நல்லடக்கம் செய்யப்பட்டது.
இரவோடு இரவாக அவர் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் சிமெண்ட் சிலாப் போட்டு மூடப்பட்டு, சுற்றிலும் பாதுகாப்பு கம்பிகள் போடப்பட்டு, பொதுமக்களின் அஞ்சலிக்கு திறந்து வைக்கப்பட்டது.
உடல் நல்லடக்கம் செய்யப்பட்டதிலிருந்தே இரவு முழுவதும் தொடர்ந்து பலர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
இன்று காலையில் வைரமுத்து அவருடைய மகன்கள் மதன் கார்க்கி, கபிலன் ஆகியோருடன் வந்து கலைஞர் சமாதியில் பால் தெளித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
ஒருவர் மறைந்து அடக்கமோ, எரியூட்டலோ செய்யப்பட்ட பின் மறுநாள் பால் ஊற்றல் நிகழ்வு நடைபெறுவது இந்து மத வழக்கம்.
ஆனால், கலைஞர் கருணாநிதி திராடவிக் கொள்கைகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட பகுத்தறிவுவாதி. இருப்பினும் அவருடைய குடும்பத்தில் உள்ள மற்றவர்களின் பக்தி வழிபாட்டுக்கு அவர் குறுக்கில் நின்றதில்லை.
கலைஞரின் பகுத்தறிவுப் பேச்சும் எண்ணமும் இந்த நாடறிந்தது. இருப்பினும் அவருடைய சமாதிக்கு இன்று காலை வைரமுத்து வந்து பால் ஊற்றிய நிகழ்வு சமூக வலைத்தளங்களில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பகுத்தறிவுக் கொள்கை கொண்ட கலைஞர் சமாதியில் அவர் இப்படி செய்திருக்கக் கூடாது என பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அதே சமயம் வேறு சிலர் வைரமுத்து அப்படி செய்ததில் தவறொன்றும் இல்லை என்றும் கூறி வருகிறார்கள்.
[post_gallery]