காற்றின் மொழி, பாடல் எழுதும் போட்டி

பாப்டா மீடியா ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பாளர் கோ. தனஞ்ஜெயன் , S. விக்ரம் குமார் , லலிதா தனஞ்ஜெயன் தயாரிப்பில், ராதாமோகன் இயக்கத்தில், ஜோதிகா, விதார்த் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘காற்றின் மொழி’.

விரைவில் வெளியாகவுள்ள இப் படத்தின் படக்குழு விநாயகர் சதூர்தியை முன்னிட்டு ‘காற்றின் மொழி பாடல் எழுதும் போட்டி’யை அறிவித்துள்ளது.

பாடல் எழுதத் தெரிந்தவர்கள், சினிமாவில் பாடல் எழுதுவதை கனவாகக் கொண்டவர்கள் இப்போட்டியில் கலந்து கொண்டு அவர்களுடைய திறமையை வெளிக்காட்ட இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

சிறந்த இரண்டு பாடல்களை மதன் கார்க்கி தேர்ந்தெடுப்பார். தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு பாடல்களும் மக்கள் முன்னால் பாடப்பட்டு எழுதியவர்களுக்கு அங்கீகாரம் வழங்கப்படும்.

இந்தப் போட்டியில் பங்குபெற 22.09.18 சனிக்கிழமை கடைசி நாள்.

போட்டியில் பங்குபெற விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளை படித்துவிட்டு பாடல் எழுதும் போட்டியில் பங்குபெறலாம்.

https://youtu.be/KAYdProfTrc

Read Previous

ரஜினிகாந்த் நடிக்கும் ‘2.0’ டீசர்

Read Next

யு டர்ன் – விமர்சனம்