பிரம்மாண்ட அரங்கில் படமான ‘பாண்டிமுனி’

“துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், யாரடி நீ மோகினி, திருவிளையாடல் ஆரம்பம், 3” ஆகிய படங்களைத் தயாரித்த ஆர்.கே.புரொடக்‌ஷன்ஸ் பட நிறுவனம் தற்போது தயாரிக்கும் படம் ‘பாண்டிமுனி’.

கஸ்தூரிராஜா இயக்கத்தில் ஸ்ரீகாந்த்தேவா இசையமைப்பில் ஜாக்கி ஷெராப், மேகாலி, ஜோதி, வைஷ்ணவி, சாயாஜி ஷிண்டே, சிவசங்கர், சுமன் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு திருவண்ணாமலை அருகே உள்ள வேட்டவலம் என்ற ஊரில் 15 நாட்கள் நடைபெற்றது. நடை பெற்றது.

இந்தப் படத்தில் ஜாக்கி ஷெராப், முனீஸ்வரசாமி என்ற அகோரி வேடத்தில் நடிக்கின்றார்.

படம் பற்றியும் படப்பிடிப்பு பற்றியும் கஸ்தூரிராஜா கூறியதாவது,

“திருவண்ணாமலை அருகே வேட்டவலம் ஜமீனுக்கு சொந்தமான குளம் ஒன்று உள்ளது. ஐந்து ஏக்கர் பரப்பில் பாறைகள் நிறைந்த இடத்துக்கு நடுவே அந்த குளம் இருக்கிறது. அந்த குளத்தில் சுமார் 4000 சதுர அடி அளவுக்கு இரும்பு தூண்கள் இரும்பு பலகைகளைக் கொண்ட அரங்கு ஒன்று அமைக்கப்பட்டது. அதன் மீது அமர்ந்து அகோரி வேடத்தில் ஜாக்கி ஷெராப் மற்றும் 400 அகோரிகள் பூஜை செய்வது போன்ற காட்சிகளை மிகப் பிரம்மாண்டமான முறையில் படமாக்கினோம்.

அத்துடன் 25 அடி உயரமுள்ள சிவன் சிலை ருத்திரதாண்டவ கோலத்தில் உருவாக்கப்பட்டு படமாக்கப்பட்டது. இரண்டு மலைகளுக்கு இடையே தொங்கு பாலம் அமைக்கப் பட்டது. அதில் அகோரிகள் வலம் வருவது மாதிரியான காட்சிகளும் படமாக்கப்பட்டது.

கைலாயத்தை பிரதி எடுத்தது மாதிரியான இந்த அரங்குகள் திரையில் பிரமிப்பை ஏற்படுத்தும் என்பது நிச்சயம். இதற்காக சுமார் 50 லட்சம் ரூபாயை செலவு செய்திருக்கிறோம்.

என் சினிமா பயணத்தில் ‘பாண்டிமுனி’ படம் வித்தியாசமான அனுபவத்தைத் தந்திருக்கிறது,” என்கிறார் கஸ்தூரிராஜா.

Read Previous

சண்டக்கோழி 2, எனக்கு மிக முக்கியமான திரைப்படம் – விஷால்

Read Next

‘சர்கார்’ வியாபாரம் 200 கோடி ?