இந்தியத் திரையுலகின் பிரம்மாண்டப் படைப்பான 2.0 படம் கடந்த வியாழனன்று வெளியாகி உலகம் முழுவதும் நல்ல வரவேற்புடன் ஓடிக் கொண்டிருக்கிறது.
ஹிந்தியில் 100 கோடி ரூபாய் வசூலைத் தாண்டியும் உலக அளவில் 450 கோடி ரூபாய் வசூலையும் 2.0 படம் கடந்துள்ளது.
இப்படம் பற்றிய ஒரு முக்கியமான அறிவிப்பை படத் தயாரிப்பு நிறுவனமான லைக்கா சற்று முன் வெளியிட்டுள்ளது. 2.0 படம் சீனாவில் வெளியாவது பற்றியதுதான் அந்த அறிவிப்பு.
“சீனாவின் முன்னணி தயாரிப்பு மற்றும் வினியோக நிறுவனமான எச்ஒய் மீடியா என்ற நிறுவனம் 2.0 படத்தை சீனாவில் மிகப் பிரம்மாண்டமாக வெளியிட உள்ளது.
அந்த நிறுவனம் ஹாலிவுட்டின் பிரபல தயாரிப்பு நிறுவனங்களான சோனி, 20 செஞ்சுரி பாக்ஸ், வார்னர் பிரதர்ஸ், யுனிவர்சல், டிஸ்னி போன்றவற்றுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.
இந்தியத் திரையுலக வரலாற்றில் மிகப் பிரம்மமாண்டமாக தயாராகி வெளிவந்துள்ள 2.0 படம் சீனாவில் டப்பிங் செய்யப்பட்டும், சப்டைட்டிலுடனும் 10000க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் 56000 காட்சிகளாக, அதில் 47000 காட்சிகள் 3டியிலும் 2019ம் ஆண்டு, மே மாதம் வெளியாக உள்ளது.
இதுவரை எந்த ஒரு வெளிநாட்டுப் படமும் இந்த அளவிற்கு வெளியானதில்லை,” என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்கள்.
The Next Major Milestone for Team #2Point0 ➡️ MEGA Release In CHINA.. #2Point0InChina #2Point0MegaBlockbuster 🔥 @rajinikanth @akshaykumar @shankarshanmugh @arrahman @iamAmyJackson pic.twitter.com/RyWsNh5sUZ
— Lyca Productions (@LycaProductions) December 4, 2018