பி2.0 புரொடக்ஷன் ஹட்சன் தயாரிப்பில் அபிஷேக் லெஸ்லி இயக்கத்தில் சந்தோஷ் பிரதாப், ஹரிஷ் மற்றும் பலரது நடிப்பில் ‘மறை பொருள்’ என்ற குறும்படம் உருவாகியுள்ளது.
ஒரு கற்பழிப்பு கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளிகளில் ஒருவர், கடத்தப்பட்டு, பேனா மூலம் முகம் சிதைக்கப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்படுகிறார். அந்த வழக்கை இன்ஸ்பெக்டர் ஹரிஷ் விசாரிக்கிறார். அவருக்கு பத்திரிகையாளரான சந்தோஷ் பிரதாப் துணையாக இருக்கிறார்.
ஒரு கட்டத்தில் அந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு அனுப்பப்படுகிறது. அதன் பின்னும் அதே போன்றதொரு மற்றுமொரு கொடூரமான கொலை நடக்கிறது. இதற்கெல்லாம் என்ன காரணம் என்பதைத்தான் இந்த ‘மறை பொருள்’ குறும்படம் சொல்கிறது.
ஒரு பரபரப்பான த்ரில்லர் ஆக இந்தப் படத்தை குறும்படம் என்று சொல்ல முடியாதபடி ஒரு திரைப்படம் போலவே உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் அபிஷேக் லெஸ்லி.