கல்லூரி மாணவிகளை பாட வைத்த இளையராஜா

இசையமைப்பாளர் இளையராஜா, அவருடைய 75 பிறந்தநாளை பல கல்லூரிகளில் விழாவாகக் கொண்டாடி வருகிறார்கள்.

சமீபத்தில் ராணி மேரி கல்லூரியிலும், எத்திராஜ் கல்லூரியிலும் நடை பெற்ற விழாவில் பல மாணவிகள் பாடி இளையராஜாவை அசத்தி விட்டார்கள். அந்த மாணவிகள் மேடையிலேயே ‘நாங்கள் சினிமாவில் பாட முடியுமா என்று ஒரு வேண்டுகோளையும் இளையராஜாவிடம் வைத்தார்கள்…

அவர்களது வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட இளையராஜா சில மாணவிகளை அழைத்து தனது ரெகார்டிங் ஸ்டூடியோவில் பாட வைத்து அதில் 9 மாணவிகளை தேர்வு செய்ததுடன் விரைவில் அவர்களுக்குப் பாட வாய்ப்பளிப்பதாகவும் உறுதி அளித்தார்.

அதன்படி எஸ்என்எஸ் பிலிம்ஸ் கெளசல்யா ராணி தயாரிக்க, விஜய் ஆண்டனி நடிக்க பாபு யோகேஸ்வரன் இயக்கும் ‘தமிழரசன்’ படத்தில் அந்த 9 மாணவிகளையும் பாட வைத்து அறிமுகப்படுத்துகிறார்.

Read Previous

வாக்களிப்பது மட்டுமே என் அரசியல் – அஜித் அறிக்கை

Read Next

மாரி 2 – வானம் பொழியாம….பாடல் வீடியோ