காஞ்சனா – ஹிந்தியில் இயக்கும் ராகவா லாரன்ஸ்

தமிழ் சினிமாவில் கடந்த 10 வருடங்களில் வந்த படங்களில் மிகப் பெரும் வெற்றிப் படமாக அமைந்த ஒரு படம் ‘காஞ்சனா’.

ராகவா லாரன்ஸ் இயக்கி நாயகனாக நடிக்க சரத்குமார் திருநங்கை ஆக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

2011ல் வெளிவந்த ‘காஞ்சனா’ படத்திற்குப் பின் 2015ல் வெளிவந்த ‘காஞ்சனா 2’ படமும் பெரிய வெற்றியைப் பெற்றது. அடுத்து ‘காஞ்சனா 3’ படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளது.

‘காஞ்சனா’ படத்தின் முதல் பாகத்தை இப்போது ஹிந்தியில் இயக்க உள்ளார் ராகவா லாரன்ஸ். அக்ஷய் குமார், ராகவா லாரன்ஸ் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். சரத்குமார் நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க முன்னணி நடிகர்களிடம் பேசப்பட்டு வருகிறது. மற்ற நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் விவரத்தை பின்னர் அறிவிக்க உள்ளார்கள்.

இந்தப் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார் ராகவா லாரன்ஸ்.

ஏப்ரலில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.

 

Read Previous

மாரி 2 – வானம் பொழியாம….பாடல் வீடியோ

Read Next

தோழர், உலகின் உன்னதமான வார்த்தை – ராஜு முருகன்