இளையராஜா 75 – பாத்திமா பாபுவின் பரவசப் பதிவுகள்…

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் நடத்திய இளையராஜா 75 நிகழ்ச்சியில் ஒரு பார்வையாளராக, ரசிகையாகக் கலந்து கொண்டு தான் ரசித்தவற்றை நாமும் நேரடியாகப் பார்த்த அனுபவத்தைத் தரும் அளவிற்கு, செய்தி வாசிப்பாளரும், நடிகையுமான பாத்திமா பாபு அவருடைய முகப் புத்தகத்தில் பதிவிட்டுள்ளவை…

Actor Vivek said – 70s la raja sir t nagar la hungry aa suthinaaru… Innikku Hungary naattulerndhe musicians varavazhaichu than mettukkalukku vaasikka vachirukkaru

Yes the musicians from Budapest were sent notes a month before and they now can play for more than 150 Raja sir ‘s songs. And many of them could not help joining in singing too as they played violin in such intense focus.

One of the best evenings of my life

Even after 12.30 in the night the mesmerised crowd was wanting more.

Great show and super team work by Vishal and his buddies. Hope his vision of having 7 days concert of Raja sir happens next year.

Kamal – Kural katti irukku paada mudiyadhu sir

Maestro – ஏன் கட்டி இருக்கீங்க அவுத்து விடுங்க

And that did the magic…. Especially kanmani anbodu kadhalan naan ezhuthum…not one bit of the original emotion was missed

The child like charm of Kamal sir and the serene poise of Raja sir…. காண கண் கோடி வேண்டும்

Three people who spoke without a filter between their thoughts and tongue in yesterday’s function are Raja sir rajini sir and mohan babu sir

Mohanbabu was referring rajini who was sitting amongst the audience as avan ivan. Raja sir says நீங்க thick friends aa irukkalaam ஆனா மேடைக்குன்னு ஒரு நாகரிகம் இருக்கு… சார் னு சொல்லுங்க.

Mohanbabu – sir pookkalukku eppadi narumanam mukkiyamo adhu pola vaazhkkaiyil haasyam mukkiyam. Medaikkaaga ennai maatri poyyaaga nadikka mudiyaathu… Dei rajini mela vaadaa

Kamal eppodhume yaarudaiya kaalaithottu kumbiduvathu kidaiyadhu. நேற்று அதனைக்கட்டுடைத்து இசைஞானியின் காலில் விழ சிரித்தபடி மேஸ்ட்ரோ இதெல்லாம் உன் ஸ்டைல் இல்லையே நீங்க சினிமாவில் “வேறு” விஷயங்களுக்கல்லவா famous என்று கிண்டலடிக்க அசராத கமல் அதையும் விட்டு வைப்பானேன் என்றபடி ராஜாவின் கன்னத்தில் அழுத்தமாக முத்தம் பதித்து இந்த இரண்டுமே இதுதான் இவரிடம் முதல்முறை என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்

ஏ ஆர் ரஹ்மானிடம் இளையராஜா – நீ உன் தகப்பனிடம் இருந்த நேரத்தைவிட என்னோடு கழித்த நேரமே அதிகம். 500 க்கும் மேற்பட்ட படங்களில் நான் இசை கோர்ப்பதைக் கூட இருந்து கவனித்திருக்கிறாய். இதைவிட வேற என்ன blessing வேணும் உனக்கு

கம்ப்யூட்டர் நுழைந்த காலத்தில் எப்போதும் அதை நோண்டிக்கொண்டிருக்கும் ரஹ்மானிடமிருந்து அதன் நுட்பங்களைக் கற்றுக்கொண்டதை மேடையில் கூறும் இசைஞானியின் பெருந்தன்மை யாருக்கு வரும்.

புன்னகை மன்னனில் கமல் ரேவதி முன் சுழன்றாடும் வயலின் பிட் ரஹ்மான் கம்ப்யூட்டரில் அமைத்ததாம். அதன் ஒரிஜினலைத் தன் மொபைல் போனிலிருந்து ரஹ்மான் ஒலிக்க வைக்க பிறகு கஸ்தூரியின் வேண்டுகோளை ஏற்று மேடையிலிருந்த கீ போர்டில் வாசிக்க ரசிகர்களின் ஆர்ப்பரிப்பு அடங்காமல் பீறிட்டெழுந்தது.

Director Shankar மேடை ஏறியபோது தொகுப்பாளர் நீங்கள் இருவரும் இணைந்தால் எவ்வளவு அழகான பாடல்களைத் தரலாம் …. சேர்ந்து பணியாற்ற வேண்டும் என கூற சற்றே கோபம் தொனிக்க இசைஞானி இதென்ன மேடையில கூப்பிட்டு வைத்து சான்ஸ் கேக்கறீங்க? அவருக்கு யாருடன் comfortable ஆ இருக்கோ அவங்களோட இணைந்து பணியாற்றட்டும் என்றார்.

மைக்கை வாங்கிப்பேசிய இயக்குனர் சங்கர் “நான் என்னென்னிக்கும் இளையராஜா சாரின் ரசிகன் தான். அதான் முதல் ஆளா அமர்ந்து கச்சேரி கேட்க ஆவலா வந்தேன் என்றார்

கமல் இளையராஜாவிடம் நீங்க ரஜினிக்கு தான் நல்ல நல்ல பாடல்கள் தருகிறீர்கள் என்றும் ரஜினி நீங்கள் கமலுக்குத்தான் சூப்பர் பாடல்கள் அமைத்து தருகிறீர்கள் என்றும் தனித்தனியே புலம்புவார்களாம். அதற்கு இசைஞானி இசை என்று வந்துவிட்டால் நான் பாரபட்சம் பார்ப்பதில்லை. ஏன் ராமராஜனுக்கு ஹிட் பாடல்கள் கொடுத்ததில்லையா… மோகன் என் பாடல்களுக்கு வாயசைத்தே “மைக் மோகன்” என்று அழைக்கப்படவில்லையா …. என்று கேஸை டிஸ்மிஸ் செய்தார்.

இளையராஜாவின் 75 ஆண்டுகால பயணத்தில் அவருக்கு தூணாய் இருந்தவர்களைப் புகைப்படத்துடன் கார்த்திக் ராஜா அறிமுகப்படுத்தும்போது தன் அக்கா தனக்கு பிரத்யேகமாக சுவையறிந்து சமைத்து போடுவதை நினைவு கூர்ந்தார் இசைஞானி. அக்கா பெண் ஜீவாவையே மணந்த ராஜாவுக்கு தன் தாயிடம் சமையல் படித்து கணவருக்கு பிடித்த உணவை சமைப்பாராம் ஜீவா. அவரைப்பற்றி கார்த்திக் ராஜா சொல்லும்போது ராமனிடம் அனுமன் கொண்ட பக்திக்கு நிகராக தன் தாய் தன் தந்தையை கவனித்துக்கொண்டதாக நெகிழ்ந்தார். அந்த உதாரணம் கேட்கையில் சிலிர்ப்பாக இருந்தது

Cheeni kum, Paa, Padman ஆகிய படங்களை இயக்கிய Balki ராஜாவின் பரம விசிறி. மேடையில் அவர் சொன்னார் – இந்தியாவுக்கு வேண்டுமானால் டில்லி தலைநகரமாக இருக்கலாம் …ஆனால் இசையின் தலைநகரம் இளையராஜா பிறந்த பண்ணைபுரம் தான் என்ற போது எழுந்த கைதட்டல் அடங்க நெடுநேரமானது என்பதை நான் தனியாக சொல்ல வேண்டுமா?

கமல் – இதுவரை யாரிடமும் பகிராத ஒரு விஷயம் சொல்கிறேன். இசைஞானி தான் என்னை அரசியலுக்கு வர சொன்னார். இளையராஜாவும் காலம் சென்ற என் அண்ணன் சந்திரஹாஸனும் ஒரு அறையில் என்னுடன் அமர்ந்து மும்முரமாக வாதாடினார்கள். அரசியலுக்கு வரவே கூடாது என அண்ணன் வாதாட கட்டாயம் வரவேண்டும் என்று இளையராஜா சொன்னார். அவர் விருப்பப்படி இதோ வந்தவிட்டேன்.

இளையராஜா – அதை நான் எப்போ சொன்னேன் (நீ எப்போ வர்றே என்ற அர்த்தத்தில்) மியூஸிக் போல எல்லாத்துலயும் டைமிங் முக்கியம் என்று குறும்பாக சிரித்தார்.

கமல் – ஆமா கொஞ்சம் காலம் தாழ்ந்துவிட்டது ஆனால் வந்துவிட்டேன்

வெங்கடேஷ், விக்ரம், பரத், விஜய் ஆண்டனி, தேவிஸ்ரீபிரசாத், மணிசர்மா, பாடகர் ப்ரசன்னா, ஹரிசரண், மது பாலகிருஷ்ணன் என நிறைய பேர் சொன்னது – சார் உங்க முன்னாடி நின்னா ஹெட்மாஸ்டர் ரூமுக்குள்ள போன மாதிரி பயமா இருக்கு சார்.

ராஜா சிரித்தபடி – தப்பா உதாரணம் சொல்லாதீங்க ஹெட்மாஸ்டர் என்னிக்கு பாடம் எடுத்திருக்காரு… வாத்தியார்னு வேணா சொல்லுங்க…

முதல் நாள் நிகழ்ச்சியில் நடிகை ராதா – இசையமைக்கும்போது எந்த நடிகர்களுக்காக என தெரிந்துகொள்வது இசையை மெருகேற்றுமா என்று கேட்டபோது இசைஞானி – அதையெல்லாம் கேட்டா இப்படி அழகழகான பாட்டு வருமா என கிண்டலடித்தார்.

விடாக்கண்டனாக (ளாக) ராதா உங்களுக்கு பிடிச்ச heroine யாருன்னு கேட்க இளையராஜா எனக்கு லைலாவை ரொம்ம்ம்ப பிடிக்கும்னு சொன்னப்ப ஆடியன்ஸ் உட்பட அனைவரும் ஷாக்காகி அமைதி காக்க… இதை கவனிக்காத இளையராஜா அப்ப நான் மூணாங்கிளாஸ்… கணக்கு போடுங்க மூணும் அஞ்சும் எட்டு வயசு எனக்கு (ஹப்பாடா அவரில்லைன்னு நிம்மதி பெருமூச்சு விட்டது யார்யாருன்னு புள்ளி விவரம் இல்ல) படத்துல மஜ்னு காதலித்தைவிட அதிகமாக நான் லைலாவைக் காதலித்தேன் என்று பால் வார்த்தார்.

– பதிவுகள் தொடரும்..

Read Previous

‘வாட் எ கிரேட் பீலிங்’ – ஏஆர் ரகுமான்

Read Next

பெண்களைக் கொண்டாடும் படம் ‘96’, திருமுருகன் காந்தி பாராட்டு