‘இரும்புத் திரை’ படத்தை இயக்கிய பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ள புதிய படத்தில் அவருடைய ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார்.
இவர் பிரபல இயக்குனர் பிரியதர்ஷன், லிசி தம்பதியினரின் மகள்.
தெலுங்கில் ‘ஹலோ’ என்ற படத்தின் மூலம் 2017ம் ஆண்டில் கதாநாயகியாக அறிமுகமானார். தற்போது தெலுங்கில் இரண்டு படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
தமிழில் துல்கர் சல்மான் ஜோடியாக ‘வான்’ என்ற படத்தில் அறிமுகமாவதாக இருந்தது, ஆனால், நடிக்கவில்லை.
அடுத்து சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இது பற்றிய அறிவிப்பை இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்கள்.
தமிழில் நடிப்பது குறித்து கல்யாணி, “”ஒரே சமயத்தில் இத்தனை வாழ்த்துகள் குவிந்து வருகிறது. தமிழில் அறிமுகமாவே என்று எதிர்பார்த்திருந்தேன். ஆனால், அது நடக்கும் என எதிர்பார்க்கவில்லை. அதிர்ஷ்டசாலி, மரியாதையானது,” என டிவீட் செய்துள்ளார்.
Never thought I could tick these many wishes off my bucket list at one go!
To be paired opposite @Siva_Kartikeyan,directed by @psmithran under @24AMSTUDIOS and @kjr_studios is the Tamil debut I always hoped for but never knew was possible.
So lucky. So honored.#SK15 https://t.co/lg4neFd19G— Kalyani Priyadarshan (@kalyanipriyan) February 19, 2019