90எம்எல் கொடுத்த அடையாளம், தேஜ் ராஜ் மகிழ்ச்சி

ஓவியா நடித்து வெளிவந்த ‘90 எம்எல்’ படத்தில் ரவுடி கதாபாத்திரத்தில் நடித்தவர் தேஜ் ராஜ். இவர் பல படங்களில் வில்லனாகவும், குணச்சித்திர கதாபாத்திரத்லும் நடித்த நடிகர் சரண்ராஜின் மகன்.

90 எம்எல் படத்தில் கிடைத்த வரவேற்புதேஜ்ராஜுக்கு ஒரு நம்பிக்கையை விதைத்திருக்கிறது.

அது பற்றி அவர் கூறியதாவது?

“எனக்கு சின்ன வயதிலிருந்தே சினிமா மீது பற்று உண்டு.

நிறைய படங்களைப் பார்த்து சினிமா ஆர்வத்தை வளர்த்துக் கொண்டேன். அதோடு இல்லாமல் எஸ்.ஆர்.எம் காலேஜில் விஸ்காம் முடித்தேன். ரகுராம் மாஸ்டரிடமும், ஸ்ரீதர் மாஸ்டரிடமும் டான்ஸை முறைப்படி கற்றுக் கொண்டேன். பாண்டியன் மாஸ்டரிடம் ஸ்டண்ட் கற்றுக் கொண்டேன். கூத்துபட்டறை, பாலுமகேந்திரா இன்ஸ்டிட்யூட் மற்றும் பாண்டிச்சேரியில் உள்ள நடிப்பு பள்ளி ஆகியவற்றில் நடிப்பை கற்றுக் கொண்டேன்.

90 ML பட வாய்ப்பு கிடைத்தது. நடித்து படமும் வெளி வந்து எனக்கு ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.

இன்று என்னை பார்க்கிற பல பேருக்கும் அடையாளம் தெரியுது. ஆட்டோகிராப் வாங்குறாங், கை கொடுக்கிறாங்க எனக்கு சந்தோஷமா இருக்கு. இன்னும் சாதிக்கனும்னு வெறி இருக்கு. அதற்கான முயற்சியில இருக்கேன்.

நிறைய பேர் வில்லனா நடிப்பீங்களான்னு கேட்கிறாங்க. வில்லனா ஹீரோவாங்கிறது முக்கியமில்லை, பேர் வாங்கனும். அப்பா மாதிரி சினிமாவில நிலைச்சி நிக்கனும்…அது தான் என் ஆசை.

நடிக்க நிறைய வாய்ப்பு வருது, கதை கேட்டுட்டு இருக்கேன். கூடிய சீக்கிரம் எந்த படத்துல நடிக்கிறேன்ங்கிறத சொல்றேன்,” என்கிறார் தேஜ்ராஜ்.

Read Previous

கே 13 – டீசர்

Read Next

சிந்துபாத் – படத்தின் சிறப்புகள்…