5வது விஜய் டிவி விருதுகள் விழா

தமிழ்த் தொலைக்காட்சிகளில் மிகவும் பிரபலமான நிகழ்வுகளில் ஒன்று ‘விஜய் டெலிவிஷன் அவார்ட்ஸ்’, புதுப்பொலிவுடன் 5வது விஜய் டெலிவிஷன் அவார்ட்ஸ் என ஏப்ரல் 6 சனிக்கிழமை அன்று EVP பிலிம் சிட்டியில், பிரம்மாண்டமாக நடைபெற்றது.

விஜய் தொலைக்காட்சி எப்பொழுதும் திறமைகளைக் கொண்டாடத் தவறியதேயில்லை. இந்த நிகழ்ச்சியின் மூலம் தன் சின்னத்திரைக் கலைஞர்களை பாராட்டி கௌரவம் வழங்கியுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் சிறந்த நடிகர், நடிகை, அபிமான குடும்பம், சிறந்த தொடர் என பல விருதுகள் வழங்கப்பட்டன.

திவ்யதர்ஷினி, மகாபா ஆனந்த் ஆகியோர் இந்த நிகழ்வைத் தொகுத்து வழங்கியுள்ளனர். நிகழ்ச்சியில் விஜய் டிவி தொடர்களின் நட்சத்திரங்கள் பங்கேற்ற பல கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் நட்சத்திரங்கள், ஒரு குடும்பத்தில் இருக்கும் அன்பு, பிரச்சனைகள், உணர்ச்சிகளை பற்றிய நிகழ்ச்சி, ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ தொடர் நட்சத்திரங்கள் ஒரு கிளாசிக் நிகழ்வு ஆகியவற்றை மேடையில் நடத்தினர். விஜய் டிவி சீரியல்களையே கிண்டலடித்து ஒரு நிகழ்வும் நடத்தப்பட்டது. தேசப்பற்று சார்ந்த ஒரு நிகழ்வும்ந டத்தப்பட்டது. இப்படி பல நிகழ்ச்சிகள் விருதுகள் வழங்கும் விழாவில் நடைபெற்றது.

யார், யார் என்ன விருது பெற்றார்கள், எந்தத் தொடர் அதிகமான விருதுகளைப் பெற்றது என்பதை விரைவில் விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள இந்த நிகழ்ச்சியில் தெரிந்து கொள்ளலாம்.

Read Previous

மாளிகை – மோஷன் போஸ்டர்

Read Next

‘வாட்ச்மேன்’ ஒரு காமெடி, த்ரில்லர் – ஜிவி பிரகாஷ்குமார்

Most Popular