‘கானல் நீர்’ என்ற படத்தில் நடிகராக அறிமுகமாகி ‘நாயகன், பெண் சிங்கம், எல்கேஜி’ ஆகிய படங்களில் நடித்தவரும், முன்னாள் திமுக எம்பியும், அதிமுக வில் எம்ஜிஆர் இளைஞர் அணி துணைப் பொதுச் செயலாளர் ஆகவும் இருந்த ஜேகே ரித்தீஷ் இன்று மாலை மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 46.
திரையுலகத்தில் கடந்த முறை நடந்த நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் அணிக்காக தீவிரமாக வாக்கு சேகரித்தவர். பின்னர் விஷாலை கடுமையாக எதிர்க்க ஆரம்பித்தார். அடுத்து நடைபெற உள்ள தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலிலும், நடிகர் சங்கத் தேர்தலிலும் போட்டியிடத் திட்டமிட்டிருந்தார்.
சினிமாவில் நலிவடைந்துள்ள பலருக்கும், ஊரில் உள்ள பலருக்கும் அவர் செய்த உதவிகளால் பரபரப்பாகப் பேசப்பட்டவர்.
இன்று ராமநாதபுரத்தில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட போது திடீரென நெஞ்சு வலியால் துடித்தவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளார்கள். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார்கள்.
ஜேகே ரித்தீஷ் திடீர் மறைவு திரையுலகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்தவண்ணம் உள்ளனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினும் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.
Life is so bloody unpredictable.unable to believe the news of my good friend #JKRitheesh s Demise. shocking. got to know him during Nadigar sangam elections. My deepest condolences to his wife and kids.i pray God to give them strength at this tough time. May his soul RIP
— Vishal (@VishalKOfficial) April 13, 2019
Shocked to hear the sudden and very sad demise of actor and #AIADMK member #JKRitesh.. had met him just 2 days back.. life is so unpredictable..my thoughts are with his family and young kids..may the force be with them and give them the strength to cope with the loss.. #RIP 🙏🏻
— KhushbuSundar (@khushsundar) April 13, 2019
https://twitter.com/varusarath/status/1117035794655350784
https://twitter.com/cherandreams/status/1117045692923441152
I will miss you sir. You treated me like your own brother. Not got even a rupee to act in LKG. So much love, care and warmth. You were a great human being. God is so cruel to take you away from your beautiful family with three children. Feel terrible. pic.twitter.com/r4B4T8wdVQ
— RJ Balaji (@RJ_Balaji) April 13, 2019
வாழ்க்கையில் தாமதமாக ஜே.கே. ரித்தீஷை சந்தித்தேன்; அவன் விரைவில் விடைபெற்றுவிட்டான். LKGயில் அவனோடு இணைந்தேன் ; அண்ணன் என்று என்னை ஆராதித்து மகிழ்ந்தான். வலிக்கிறது இதயம்! வடிகிறது கண்ணீர்! தாங்கிக்கொள்ள முடியாமல் தவிக்கிறேன்! #ripjkrithish #JKRitheesh #JKRithesh
— Nanjil Sampath (@NanjilPSampath) April 13, 2019
Life Can Be Soo Illogical At Times. Soo Soft Spoken And Respectful. It Was Such A Pleasure Getting To Know Him During The Shoot Of #LKG. Such A Generous Man! #RIPJKRitheesh Sir!
— Priya Anand (@PriyaAnand) April 13, 2019
பலருக்கு உதவிக்கரம் நீட்டி இன்னல் துடைத்த நண்பர் நடிகர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு. ஜே.கே.ரித்தீஷின் இந்த அவசர மறைவு வாழ்வின் நிதர்சனத்தையும் நிலையாமையையும் நம் முகத்தில் அறைகிறது. அவர் குடும்பத்தினருக்கும் உறவினருக்கும் நண்பர்கட்கும் என் ஆழ்ந்த இரங்கல்கள்😭
— Vivekh actor (@Actor_Vivek) April 13, 2019